செய்திகள்

தங்காலை விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஜனாதிபதி செயலகத்துக்கு செந்தமானதல்ல : மஹிந்த

தங்காலை பகுதியில்  விபத்துக்குள்ளான சிரிலிய சவிய அமைப்புக்குச் சொந்தமான பதிவு செய்யப்படாத பரடோ ஜீப்  ரக வாகனம், ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமானது அல்ல என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனம் முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான சிராந்தி ராஜபக்‌ஷ நடத்திச் செல்லப்பட்ட சிரிலிய சவியவுக்கு செந்தமான வாகனம் எனவும் அது ஜனாதிபதி செலகத்திலிருந்து கடந்த ஆட்சியில் பெற்றுக்கொள்ளப்பட்டதெனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை அடுத்து, உலக உணவுத் திட்ட அமைப்பினரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வாகனங்களில் ஒன்று அத்துடன், இது அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு பயன்பட்டது என்பதால் மோட்டார் வாகன பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படாது, விஷேட சிவப்பு இலக்கத் தகடுடன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
பின்னர் உலக உணவுத் திட்டத்தால் கைமாற்றப்பட்ட குறித்த வாகனம், ஜீ.ஆர். 109, ஜீ.ஆர்.114 ஆகியன 2012ம் ஆண்டு சிரிலிய சவியவிடம் கிட்டியது. பதியப்படாத இந்த வாகனங்களை பதிவு செய்ய அதிக வரி செலுத்த வேண்டி இருந்ததால் இவை பயன்படுத்தப்படாமல் வீரஹெடிய பகுதி நிலம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இவற்றை பயன்படுத்த சிரிலிய சவிய யாருக்கும் அனுமதி வழங்கவில்லை, அத்துடன் சிலர் கூறுவது போல் அது ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனமும் இல்லை என மஹிந்த ராஜபக்ஷ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்..