செய்திகள்

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை மாத்திரம் பஸ்களில் அனுமதிக்க யோசனை!

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவைகளில் அனுமதிக்கும் வகையில் திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் பாதுகாப்பாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை முன்னெடுக்க முடியும் என குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-(3)