செய்திகள்

தடை செய்யப்பட்ட வெடி மருந்து வைத்திருந்தவர்களுக்கு மல்லாகம் நீதிமன்றத்தால் அபராதம் விதிப்பு

யாழ்.சிறுப்பிட்டி மேற்கில் தடை செய்யப்பட்ட வெடிமருந்து வைத்திருந்த இருவருக்கெதிராக மல்லாகம் நீதிமன்றத்தால் தலா 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தடை செய்யப்பட்ட 9 கிலோ 416 கிராம் இறப்பர் வெடி மருந்துகளைப் பாவித்த கல்லுடைக்கும் தொழிலாளிகள் இருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.சந்தேக நபர்களுக்கெதிராக அச்சுவேலிப் பொலிஸாரால் நேற்று முன்தினம் புதன்கிழமை(06.5.2015) குற்றப் பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

சந்தேகநபர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டதையடுத்து நீதவான் கறுப்பையா ஜீவராணி குறித்த அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார். யாழ்.நகர் நிருபர்-