செய்திகள்

தண்டனை தாமதத்தால் அர்ஜுன அதிருப்தி!

திருடர்களுக்கு தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதிருப்தியில் இருப்பதாக துறைமுக, கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் பல ஊழல், மோசடிகள் குறித்து தனக்கு தொலைபேசி ஊடாகவும் வேறு வழிகளிலும் முறைப்பாடு கிடைக்கப்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது குறித்து நேரடியாக பார்த்து ஆராய்ந்த பின்னரே மேலதிக நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.

நான் அப்பாவி அல்ல யார் குற்றம் செய்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படும். ஜனாதிபதி, பிரதமர் இதில் தலையிட வர மாட்டார்கள். நிறுவனங்களுக்குள் அரசியல் வேண்டாம். நான் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்ததால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். களவு இல்லாதொழிக்கப்பட வேண்டும் என அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சிவில் விமான சேவை அதிகார சபைக்கு இன்று காலை சென்றிருந்த வேளை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.