செய்திகள்

தனித்து போட்டியிட முன்னிலை சோஷலிச கட்சி தீர்மானம்

பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட முன்னிலை சோசலிச கட்சி தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டு குமார் குணரட்னம் தலைமையிலான குழுவினர் ஜே.வி.பியிலிருந்து பிரிந்து முன்னிலை சோசலிஷ கட்சியை உருவாக்கினர். இந்த கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து தனது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியிருந்தது.
இந்நிலையில் முதற் தடவையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அந்த கட்சி தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.