செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்போருக்கு நிவாரணப் பொதி

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் முடக்கப்படாத பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் இந்த நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்களூடாக தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது.

20 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கி குறித்த நிவாரணப் பொதி தயார் செய்யப்படவுள்ளது.

இந்த நிவாரணப் பொதிகளை விநியோகிப்பதற்காக மாத்திரம் நாடளாவிய ரீதியிலுள்ள சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
-(3)