செய்திகள்

தனியார் துறையினரின் சம்பளம் விரைவில் அதிகரிக்கப்படும்: பிரதமர் ரணில் தெரிவிப்பு

அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதை போன்று தனியார் துறையினரின் சம்பளம்  அதிகரிக்கப்படவுள்ளதாக  பிரதமர்  ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக  விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பள நிர்ணய சபையுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன்படி விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சம்பள நிர்ணய சபைக்குள் உள்ளடங்காத பிரிவினர் தொடர்பாகவும் கவனம் செலுத்தி அவர்களுக்கும் உரிய சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கையெடுப்பதாவும் ரணில் தெரிவித்துள்ளார்.