செய்திகள்

தன்னை பார்க்க வரும் மக்களுக்கு உணவு வழங்கும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை பார்ப்பதற்கு தங்கல்ல கார்ல்டன் வீட்டிக்கு தினமும் பொதுமக்கள் பலர் சென்று வருவது தெரிந்ததே.

அதேவேளை நேற்று முதல் மகிந்த ராஜபக்ச தன்னை பார்ப்பதற்கு வருகை தந்த மக்களுக்கு தன்சல் (அன்னதானம்) ஒன்று ஏற்பாடு செய்யபட்டு சாப்பாடு வழங்கியுள்ளார்.

குறிப்பிட்ட உணவு தன்சலை கடவுன பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் முன்னாள் ஜனாதிபதியும் மகிழ்ச்சியில் உள்ளாராம்.