செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்

பொதுத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென  மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு, தகுதியான அரசாங்க ஊழியர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.