செய்திகள்

தமது அரசாங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரே பிரதமர் : அநுர பிரியதர்ஷன யாப்பா

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கம் அமைக்கப்படுமாகவிருந்தால் அதன் பிரதமர் எதிர்க் கட்சித் தலைவரே என ஶ்ரீ லங்கா சுதநதிரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பாராளுமன்றம் அமைக்கப்படுவதற்கு முன்னர் தங்களின் ஆட்சி அமையுமாக இருந்தால் அதன் பிரதமர் யார் என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற சம்பிரதயப்படி எதிர்க்கட்சி தலைவரே பிரதமராக தகுதியுடையவர். இதன்படி அவர்தான் பிரதமர் என தெரிவித்த அநுர யாப்பா தனக்கு அருகில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை காட்டினார்.