செய்திகள்

தமிழகத்தின் ஆட்சி திமுக வசமானது: முதலமைச்சர் ஆகிறார் ஸ்டாலின்

தமிகழத்தில் 10 வருடங்களின் பின்னர் திமுக ஆட்சி உறுதியாகியுள்ளது.

ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்ற நிலையில், மாலை 6 மணி வரையில் வெளியாகியுள்ள வாக்கு எண்ணிக்கை சுற்றுகளுக்கமைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக 156 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

அத்துடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 78 தொகுதிகளில் மாத்திரமே முன்னிலையில் உள்ளது.

இதன்படி திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று அதிகாலை வெளியாகவுள்ளது.

இதன்படி திமுக 10 வருடங்களின் பின்னர் ஆட்சியமைக்கவுள்ளதுடன், முதலமைச்சராக முதல்தடவையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.

காலை முதல் தொகுதிகளின் முன்னிலை வாக்கு எண்ணிக்கை விபரங்கள் வெளியாகும் நிலையில் திமுக தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
-(3)