செய்திகள்

தமிழகம் முழுவதும் 20 ஆம் திகதி முதல் இரவு நேர ஊரடங்கு!

தமிழகம் முழுவரும் எதிர்வரும் 20 ஆம் திகதி திகதி முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 20 ஆம் திகதி முதல் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இரவு நேர ஊரடங்கின் போது தனியார் பொது போக்குவரத்து ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று மாலை பிறப்பித்துள்ளது.இதன்போதே ஊரடங்கு அமுல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. -(3)