செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது பெற்றோல் குண்டுவீச்சு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீன்பிடிப் படகு மீதே இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த படகில் 5 பேர் இருந்ததாகவும் ஆயினும் காயமடையவில்லை எனவும் படகில் தீ பிடித்த போதும் அதனை அணைத்து விட்டு அவர்கள் கரை திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கச்சதீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே மரக்கட்டைகளையும் போத்தல்களையும் வீசி மீனவர்களை இலங்கை கடற்படையினர் துரத்தியதாக உள்ளுர் பொலிஸார் கூறியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக கிய+ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 86 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய தீர்மானித்திருப்பதாக நேற்று முன்தினம் ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் கைதான மீனவர்களை விடுவிக்க தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.