செய்திகள்

தமிழக முகாம்களிலுள்ள இலங்கை அகதிகளை அழைத்து வர ஐ.நா உதவி

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் தாய் நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக, ஐ.நா அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து கடந்த 13ம் திகதி 60க்கும் மேற்பட்ட அகதிகள் நாடு திரும்பினர். இவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனம் உதவி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்திருக்கும்; இலட்சக்கணக்கான இலங்கையர்களை தாய் நாட்டுக்கு அழைத்து வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.