செய்திகள்

தமிழ்தேசிய மக்கள் முன்னனி வல்லையில் இளையோருடன் கலந்துரையாடல்

தமிழ் தேசிய மக்கள் முன்னனி பிரமுகர்கள் நேற்றுக்க காலை வடமராட்சி வல்லை ஆனந்தம் சன சமூக நிலையத்தில் அந்த நிலைய உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுடன் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

கட்சியின் தலைவர் பொ. கஜேந்திரகுமார், செயலாளர். செ கஜேந்திரன், சர்வதேச அமைப்பாளர். மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்வரும் பொது தேர்தல் தொடர்பாக கருந்துக்களை முன்வைத்தனர்.

தமிழ் மக்களின் அரசியல் , சமூக மற்றும் பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வில் தழிழர் தரப்பு ஏன் உறுதியாக இருக்க வேண்டும் என்று குறிப்பாக வலியுறுத்தினர்.