செய்திகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 19 ஆவது திருத்தத்தை ஆதரிக்கும்:சுரேஷ் பிரேமச்சந்திரன்

19 ஆவது அரசியல் சீர்திருத்தத்தைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் எனத் தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

19 ஆவது அரசியல் திருத்தம் எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில் இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?எனக் கேட்ட போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

இதேவேளை,19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு விரைவில் கூடிப் பேசவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார்.