செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் காலமானார்.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த துரைரட்ணசிங்கம் நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி காலமானதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டம், மூதூர், சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 1960 ஆம் ஆண்டு முதல் பல பாடசாலைகளில் பணியாற்றிய பின்னர் துரைரத்தினசிங்கம் 2001 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார்.

ததேகூ உறுப்பினர்களில் இரண்டாவதாக வந்து பாராளுமன்றம் தெரிவாகவில்லை. ஆனாலும், ததேகூ தேசியப் பட்டியல் உறுப்பினர் மு.சிவசிதம்பரம் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக 2002 ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2015 தேர்தலில் ததேகூ வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவாகவில்லை. இவர் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் ஊடாக பாராளுமன்றம் வந்தார்.
இறக்கும் போது இவருக்கு 80 வயதாகும்.

-(3)