செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்: சோபித தேரர் கோரிக்கை

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் தொடர்­பி­லான விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்த விசேட நீதி­மன்­ற­மொன்றை கட்­ட­மைக்கும் ஒழுங்கு முறை அர­சாங்­கத்­திடம் உள்­ளதா என சர்­வ­மத தலை­வர்கள் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் யுத்­த­த்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக் ­கா­வலில் வைக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி, இதன்போது குற்­ற­மற்­ற­வர்­களை உடன் விடு­தலை செய்­ய­வேண்டும்.

மேலும் யுத்­த­தினால் இடம்­பெ­யர்ந்­தோரின் காணிகள் தொடர்­பி­லான சட்­டத்தில் சிக்­கல்கள் இருப்பின் திருத்­தங்­களை மேற்­கொண்­டா­வது உட­ன­டி­யாக மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்த வேண்டும் என சர்­வ­மத தலை­வர்கள் பேரவை அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

அத்­தோடு வடக்கில் மீள்­கு­டி­யெற்றம் செய்­யப்­பட்­டாலும் எந்­த­வொரு வச­தி­களும் இன்றி யுத்­த­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வானத்தை அன்­னாந்து வேடிக்கை பார்க்கும் நிலை­மையே வடக்கில் காணப்­ப­டு­கி­றது. எனவும் அப்­பே­ரவை சுட்­டி­காட்­டி­யுள்­ளது.

சர்வமத தலைவர்கள் பேரவையுடான விஷேட சந்திப்பு நேற்று நீதி அமைச்சில் இடம் பெற்றது.

வடக்கு மக்­களின் பிரச்­சிணை தொடர்பில் நேற்று நீதி அமைச்சில் இடம்­பெற்ற விஷேட கலந்­து­ரை­யா­டலின் போதே சர்­வ­மத தலை­வர்கள் பேர­வையின் உறுப்­பினர் மாது­லு­வாவே சோபித தேரர் மற்றும் கரிதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் நிதி அமைச்சர் விஜய தாஸ ராஜபக்ஷவிடம் கேள்வியொழுப்பினர்.

மதுலுவாவே சோபித தேரர் கருத்து வெ ளியிடுகையில் தெரிவித்ததாவது:

“யுத்­ததின் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­களில் பல்­வேறு தரப்­பினர் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டு­ள­ளனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் மீது எந்­த­வொரு விசா­ர­ணை­களும் முன்­னெ­டுக்­காமல் பல வரு­டங்­க­ளாக குறித்த அர­சியல் கைதி­களை தடுத்து வைத்­துள்­ளனர்.

இது குறித்­தான பிரச்­சிணை சர்­வ­தேச அளவில் பெரும் அவ­தா­னத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளது. இந்த விடயத்தில் இலங்கை சிக்­கி­கொண்­டுள்­ளது. தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்பில் பல்­வேறு தர­வுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. எனினும் குறித்த தர­வுகள் எந்த அளவு உண்மை தன்மை கொண்­டவை என்­ப­தனை எம்மால் உறு­தி­யாக கூற­மு­டி­யாது. ஆகையால் இது குறித்­தான உண்மை தக­வல்­களை அர­சாங்கம் வெளியி­ட­வேண்டும் . எனவே சர்­வ­மத தலை­வர்கள் என்ற வகையில் நாம் தற்­போது இது குறித்து அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம்.

இந்­நி­லையில் யுத்­ததின் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­களில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பல வரு­டங்­க­ளாக வேதனை அனு­ப­வித்து வரு­கின்­றனர். அர­சியல் கைதிகள் மாத்­தி­ர­மின்றி ஏனைய குற்­றச்­செ­ய­லுக்­காக கைது செய்­யப்­பட்­டோ­ரி­னதும் நிலைமை இவ்­வாறே காணப்­ப­டு­கி­றது. கைது செய்­யப்­பட்­டோரின் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்து கொள்­ளாது பல வரு­டங்­க­ளாக சிறை­யி­லேயே தனது வாழ்க்­கையை கொண்டு செல்­கின்­றனர். இதன்­கா­ர­ண­மாக அவர்­க­ளது வாழ்க்கை அர்த்­த­மற்­ற­தாக மாறு­கி­றது. எனவே இந்த நிலை­மையை மாற்­றி­ய­மைக்க வேண்டும்.

இதற்­க­மைய யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டோரின் மீதான விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்தி , அத­னு­டாக குற்­ற­வா­ளிகள் அல்­லாத அனை­வ­ரையும் உட­ன­டி­யாக விடு­தலை செய்­ய­வேண்டும் . இதனை துரி­த­மாக செய்­ய­வேண்டும்.

இதே­வேளை 30 வரு­டக்­கால இடம்­பெற்ற யுத்­ததின் கார­ண­மாக தனது சொந்ந இடங்­களை இழந்து பலர் அகதி முகாம்­க­ளி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். அது­மாத்­தி­ர­மின்றி பலர் இந்­திய அகதி முகாம்­க­ளிலேும் வாழ்ந்து வரு­கின்­றனர். தற்­போது 10 வரு­டங்­க­ளுக்கு மேல் தனது சொந்த இடங்­களில் இழந்து வாழ்ந்து வரு­கின்­றனர்.

ஆகையால் வடக்கில் இடம்­பெ­யர்ந்த அனை­வ­ரையும் அர­சாங்கம் மீள்­கு­டி­யேற்ற வேண்டும். இதன்­போது தமி­ழர்கள் மாத்­தி­ர­மின்றி சிங்­க­ள­வர்கள் ,முஸ்­லிம்­க­ளையும் மீள்­கு­டி­யேற்ற வேண்டும். இந்த விட­யத்தில் சட்­ட­சிக்­கல்கள் ஏதும் இருப்பின் குறித்த சட்­டங்­களை திருத்­தி­யா­வது மீள்­கு­டி­யேற்­றத்தை துரி­தப்­ப­டுத்த வேண்டும். எனவே மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் காலத்­தா­மதம் கொள்­ளாமல் மீள்­கு­டி­யேற்ற வேண்டும்.

வடக்கில் யுத்­த­தினால் பாதிக்­கப்­பட்­டோரை மீள்­கு­டி­யேற்றம் செய்த போதிலும் எந்­த­வொரு தொழில் வச­தியும் இல்­லாமல் அவர்­களால் நிம்­ம­தி­யாக வாழ்க்­கையை கொண்டு செல்ல முடி­யாது. இந்­நி­லையில் அவர்கள் தனது வாழ்­வா­தா­ரத்­திற்­காக வானத்தை அன்­னாந்து வேடிக்கை பார்க்கும் நிலைமை ஏற்­படும். ஆகையால் வடக்கு மக்­களின் பொரு­ளா­தாரம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். அப்­பி­ர­தேச மக்­களின் பொரு­ளா­தாரம் அபிவிருத்தி செய்யப்படாவிடின் வடக்கு மக்களின் பிரச்சினையை ஒரு போதும் தீர்க்க முடியாது.

முன்னைய ஆட்சியின் போது எம்மீது சர்வதேசத்தினால் விதிக்கப்பட்ட தடைகள் தற்போதைய புதிய ஆட்சியில் நீக்கப்படும் என நம்புகிறோம். இதன்படி எமக்கு ஜீ.எஸ்.பீ பிளஸ் சலுகை ,ஐரோப்பிய மீன் இறக்குமதி தடைகள் நீக்கப்படும்.இதனுடாக வடக்கு மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும். எமது நாட்டு மக்கள் யாழ்ப்பாணத்தில் பயிரப்படும் கிழங்கிற்கு அதிகளவு விருப்பம் .எனவே வடக்கு பொருளாதாரம் நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. என்றார்.