செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜோன் கெரியை சந்தித்தனர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று காலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றதுடன் இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் , வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது,
“ஜோன் கெரியை நாம் சந்தித்த போது அவர் பல விடயங்களை கூறினார். அதாவதுதற்போதைய சூழ்நிலை நல்ல முறையில் மாறிக்கொண்டு வரும்போது அதனை நாங்கள் எங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்த வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தியுள்ளர்.
பலவிதமான பிரச்சினைகளை நாங்கள் எதிர்நோக்கினாலும் சூழ்நிலையின் நன்மையைக் கருதி கொடுத்தும் எடுத்தும் எங்களது பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று தெரிவித்தார். அத்துடன் எங்களுடைய பிரச்சினைகளை அவர் நன்கு உணர்ந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அந்த உணர்ச்சியுடனே தாங்கள் செயற்படுவதாகவும், அந்த செயற்பாட்டை நாங்கள் மனதில் இருத்தவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.அதன் அடிப்படையிலே விரைவில் பல அரசியல் ரீதியான மாற்றங்களும்இ அரசியல் ரீதியான நன்மைகளும் பெறக்கூடுமென்பதை வலியுறுத்தினார்.” என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.