செய்திகள்

தமிழ் பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்கள் சரியாக இயங்குவதில்லை என்கிறார் பொன். செல்வராஜா

தமிழ் பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்கள் சரியாக இயங்குவதில்லை. அதிகாரம் பெற்ற அதிகாரிகளை நியமிக்கும்போது அவர்கள் அங்குள்ள சொத்துகளை அழிக்கும் பணிகளை மட்டுமே செய்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓய்வூதிம் பொறுவோரின் ஓய்வூதிய சங்க கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
தமிழர்கள் அரச வேலைவாய்ப்புகளை பெறுவதில் கடந்த காலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிவந்தனர்.எமது ஊழியர்கள் ஓய்வு நிலையை அடையும்போது குறைந்த ஓய்வூதியத்தினையே பெறுகின்றனர்.இதற்கு காரணம் கடந்த காலத்தில் எமது சமூகத்தில் உரிய தகைமைக்கு தொழில்பெற்றுக்கொள்ளாததே காரணமாகும்.அதிகமான தகைமையிருந்தும் உரிய தொழிலைப்பெற்றுக்கொள்ளாததே இதற்கு காரணமாகும்.

இலங்கையில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் இனவிகிதாசாரத்தில் நியமனங்களை வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணசபை மட்டுமே உள்ளது.கிழக்கு மாகாணசபை மூலம் கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நியமனங்களில் பெரும் அநீதிகள் இழைக்கப்பட்டன.அவற்றிற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு நீதிமன்றில் வழக்குகளை தாக்கதல் செய்துள்ளது.

கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதில் புறக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டேவந்தன.தமிழ் மக்கள் புறக்கணிப்புகளை எதிர்கொண்டபோதெல்லாம் அதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பே நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதற்கு பல உதாரணங்களை நாங்கள் சொல்லலாம்.நிர்வாக சேவை பரீட்சையில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டபோது எல்லாம் அதற்கு எதிராக நாங்கள் குரல்கொடுத்தோம்.ஆனால் அரசாங்கத்துடன் இணைந்திருந்த தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டபோது வாய்மூடி மௌனிகளாகவே இருந்தனர்.

இலங்கையின் வரலாற்றினை எடுத்து நோக்கினால் இலங்கையின் முதலாவது தேசிய தலைவராக இருந்தவர் ஒரு தமிழர்.அதேபோன்று முதலாவது நிர்வாக சேவை அதிகாரியாகவும் ஒரு தமிழரே இருந்துள்ளார்.இவ்வாறான முக்கியத்துவமிக்க தமிழர்கள் இன்று அனைத்து வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர்.

வாழைச்சேனை கடதாசி ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.அவர்களுக்கு ஐந்து மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை.இது தொடர்பில் புதிய அமைச்சின் செயலாளரின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது அவருக்கு கடந்த கால நிலைமை தொடர்பில்சரியான தகவல்கள் வழங்கப்படவில்லை.

தமிழ் பகுதிகளில் இருக்கும் நிறுவனங்கள் சரியான முறையில் இயங்குவதில்லை.அதிகாரம் உள்ள அதிகாரி நியமிக்கப்படும்போதும் அங்கு அவர் அங்கிருந்த சொத்துகளை அழிக்கும் பணியை மட்டுமே செய்துள்ளார்.

IMG_0003 IMG_0006 IMG_0008