செய்திகள்

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சமலுடன் கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்றஉறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது பல்வேறு விடயங்களுக்குஅமைச்சர் சாதகமான பதில்களைவழங்கியுள்ளதுடன் அடுத்த கட்டமாகமீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதற்கும்இணக்கம் காணப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்தைதரமிறக்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்கவும் இணக்கம் தெரிவித்தார்.

அத்துடன் முல்லை கரைத்துறைப்பற்றில் 08 கிராம சேவையார் பிரிவுகளதும் காணிநிர்வாகத்தினை மகாவலி அதிகார சபைபொறுப்பேற்பதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் அமைச்சர் சமல்ராஜபக்ச பணித்துள்ளார்.

இது தொடர்பில் குழு அமைத்து ஆராயும்வரை எந்த நடவடிக்கையும் மேலதிகமாகநடைபெறாதனவும் அவர் கூறியுள்ளார்.
-(3)