செய்திகள்

தமீம் இக்பால் இரட்டை சதத்தால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது

பாகிஸ்தான் பங்களாதேஷ்அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தமீம் இக்பாலின் இரட்டை சதத்தால் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் கடந்த 28-ந்தேதி குல்னாவில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் 332 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் முகமது ஹபீஸ் இரட்டை சதத்தால் 628 ஓட்டங்கள் குவித்தது.

முதல் இன்னிங்சில் பங்களாதேஸ் 296 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இருந்ததால் இந்த போட்டியில்பங்களாதேசை வீழத்தி விடலாம் என்று பாகிஸ்தான் வீரர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தமீம் இக்பால் கெய்ஸ் சிறப்பாக விளையாடி அவர்களின் எண்ணத்தை நொறுக்கினர்.

இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தமீம் இக்பால் 138ஓட்டங்களுடனும் இம்ருல் கெய்ஸ் 132 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கெய்ஸ் 150 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால் தமீம் இக்பால் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அதன்பின் 206 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.. அடுத்து வந்த மெக்முதுல்லா 40 ஆட்டமிழக்க ஷாகிப் அல் ஹசன் அரை சதத்தை கடந்தார்.

எனவேஇ அணி 136 ஓவரில் 555 ரன்கள் எடுத்திருக்கும்போது இரு அணி தலைவர்களும் போட்டியை முடித்துக்கொள்ள முடிவு செய்தனர். இதனால் குல்னா டெஸ்ட்வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது