செய்திகள்

தம்புள்ள பொருளாதார மையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டவுள்ளது

தம்புள்ள பொருளாதார மையம் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வர்த்தகத்திற்காக குறித்த நிலையம் திறக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டமையினைத் தொடர்ந்து தம்புள்ள பொருளாதார மையத்தை மூடுவதற்கான முடிவு 26 ஆம் திகதி எடுக்கப்பட்டது.

இதேவேளை மாத்தளை மாவட்ட கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தீர்மானத்தின் படி இன்று மற்றும் நாளைய தினம் மாத்திரம் மாத்தளை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களின் அறுவடையை பொருளாதார மையத்திற்குள் எடுத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளன.(15)