செய்திகள்

‘தம்மிகவின் பாணி மருந்து’ கொரோனாவை கட்டுப்படுத்தாது: ஆய்வில் உறுதி!

கேகாலையிலுள்ள உள்ளூர் மருத்துவரான தம்மிக்க என்பரால் தயாரிக்கப்பட்ட பாணி மருந்து எந்த வகையிலும் கொரோனாவை கட்டுப்படுத்தாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தான் கொரோனாவை தடுப்பதற்காக பாணி மருந்தை கண்டுபிடித்துள்ளதாக தம்மிக்க என்பவர் அறிவித்த நிலையில் அது தொடர்பாக பெரிதாக பேசப்பட்டது.

அத்துடன் அவரின் அந்த மருந்தை சுகாதார அமைச்சர், சபாநாயகர் ஆகியோரும் பருகியிருந்தனர்.

ஆயினும் ஆய்வில் அது கொரோனாவை கட்டுப்படுத்தக் கூடியது என்று உறுதியாகவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-(3)