செய்திகள்

தரமற்ற 55,000 பௌத்த கொடிகள் மீட்பு!

புறக்கோட்டை பகுதியில் விற்பனை செய்வதற்கென வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த 55,000 பௌத்த கொடிகள்; நுகர்வோர் அதிகார சபையால் மீட்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பகுதி வர்த்தக நிலையங்கள் ஐந்தில் இருந்து இந்த பௌத்த கொடிகள் மீட்கப்பட்டுள்ளன.

வெசாக் பண்டிகை முன்னிட்டு இந்த பௌத்த கொடிகள் விற்பனை செய்யப்பட இருந்ததாகவும் இவ்வாறான தேடுதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தரமற்ற பௌத்த கொடி வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.