செய்திகள்

தற்போதைய அரசாங்கம் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றவில்லை : இராணுவ பேச்சாளர்

கடந்த அரசாங்க காலப்பகுதியிலேயே வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டதாகவும் இந்த அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லையெனவும் இராணுவ பேச்சாளர்  பிரிக்கேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி தற்போதைய அரசாங்கம் புலிகள் தலை தூக்க இடமளித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது கலந்துக்கொண்டிருந்த அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதற்கு அமைச்சர் கபீர் ஹாசீம் பதிலளித்துவிட்டார். இந்த அரசாங்கத்தில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை. 2009 ஏப்ரல் முதல் 2014 ஜூலை மாதம் வரையான காலப்பகுதியிலேயே 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டிருந்தன.  கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் எந்தவொரு முகாமும்  அகற்றப்படவில்லை . இந்த அரசாங்கத்தின் கீழ் 1000 ஏக்கர்  நிலப்பரப்பே மீள கையளிக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.