செய்திகள்

தவறான தகவல்களைக் கொடுத்தாரா? விமலின் மனைவி கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச, பொய்யான தகவல்களை வழங்கி பெற்றுக்கொண்ட சர்ச்சைக்குரிய இராஜதந்திர கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரின் மனைவி 2010ஆம் ஆண்டு, பொய்யான தகவல்களை கொண்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனை 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வித்தியாசப்படுவதாகவும் அவர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.