செய்திகள்

தவில் உலகின் முடிசூடா மன்னன் இணுவில் தெட்சணாமூர்த்தி பற்றிய சிறந்ததொரு ஆவணப்படம்

தவில் உலகின் முடிசூடா மன்னன் என்று புகழப்படும் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த லய ஞான குபேர பூபதி வி.தெட்சணாமூர்த்தியின் ஆவணப் படம் ஒன்று அவரது ஒப்பற்ற ஆற்றல், சாதனைகள் மற்றும் வாழக்கை ஆகியவற்றை எடுத்துக்கூறும் வகையில் தயாரிக்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இணுவிலின் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்து 43 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து, தவில் உலகத்துக்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, தெட்சணாமூர்த்தியைப் போல ஒரு தவில் மேதை இனி 3000 ஆண்டுகளுக்கு பிறக்க முடியாது என்று தவில் மேதைகளும் இசை ஆய்வாளர்களும் கூறும் அளவுக்கு ஒப்பற்ற புகழும் பெருமையும் கொண்ட அவரது வாழ்க்கையை இந்த ஆவணப் படம் சிறப்பாக காட்டுகிறது.

இலங்கை , இந்தியா மற்றும் உலகம் முவதிலும் வாழுகின்ற அவரை அறிந்த, அவரோடு பழகிய, அவரோடு வாழ்ந்த தவில் மேதைகள், நாதஸ்வர மேதைகள், இசை ஆய்வாளர்கள், அவரது பிள்ளைகள், உடன்பிறப்புக்கள், நண்பர்கள், அயலவர்கள், ரசிகர்கள் அவரைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை கீழேயுள்ள ஆவணப்படத்தில் காணுங்கள்.

இந்த ஆவணப்படத்தை தெட்சணாமூர்த்தி பவுண்டேஷன் தயாரித்துள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=1g6fkw_4AQw” width=”500″ height=”300″]