செய்திகள்

தாதிமார்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதிப்பு!

நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் தாதிமார்கள் சுகயீன விடுமுறை போராட்டை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் அகில இலங்கை தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொவிட் சிகிச்சை நடவடிக்கையில் ஈடுபடும் தாதிமார்களின் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரையில் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் பணிக்கு செல்ல மாட்டார்கள் என்று அந்த சங்கம் அறிவித்துள்ளது.

-(3)