செய்திகள்

தாயும் மகளும் ஒரு வருடத்தின் பின்னர் இணைந்தனர்

விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுவதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி ஓர் வருடத்தின் பின்னர் கடந்த 10 ஆம் திகதி விடுதலையான ஜெயகுமாரி இன்று தனது மகள் விபூஷிகாவுடன் ஒன்றிணைந்தார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பராமரிப்பில் இருந்த தனது மகள் விபூஷிகாவை தன்னுடன் இணைவதற்கு அனுமதிக்குமாறு கோரி ஜெயகுமாரி கிளிநொச்சி நீதிமன்றத்தில் செய்திருந்த மனுவை கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது. ஜெயகுமாரி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரின் கீழ் இருந்தமையினால் அவரிடம் அவரது மகளை ஒப்படைபதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரின் கடிதம் அவசியம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.