செய்திகள்

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர்

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.20 மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு ஒன்று இன்று கவிழ்ந்துள்ளது.இதில் பயணம் செய்த மாணவர்களில் ஏழு பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன், காணாமல் போன மாணவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளைஉயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சடலமாக மீட்கப்பட்டவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரியவருகிறது.

பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் எனப் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.காப்பற்றப்பட்டவர்கள் நோயாளர் காவு வண்டி மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுள்ளனர். மேலும் இவ்விபத்தில் பலர் உயிரிழந்திருக்ககூடும் என அச்சம் வெளியிடப்படுகிறது.எனினும், சரியான மரண விபரம் இன்னும் தெரியவராத நிலையில் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.(15)