செய்திகள்

திருச்சி சிறையில் 9 ஆவது நாளாக போராடும் இலங்கைத் தமிழர்கள்

தமிழ்நாடு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்திருக்கக் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்தும் 9 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடனடியாக தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி 78 பேர் தொடர்ந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு தங்களுடைய விடுதலை தொடர்பில் இதுவரை தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள் தமக்குரிய விடுதலை கிடைக்கும் வரை தாம் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடரும் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
-(3)