செய்திகள்

திருட்டு நகை வியாபாரத்தில் பொலிஸாரும் உடந்தையா விசாரணை ஆரம்பம் – பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ்

திருட்டு நகைகளையும் கொள்ளை நகைகளையும் வாங்கி வியாபாரம் செய்பவர்களை அடையாளப்படுத்திய பொலிஸார் சிலர் அவர்களிடம் இருந்து உருக்கப்படும் திருட்டு நகைகளுக்கு ஏற்ப தங்க நகைகளைக் கப்பமாகப் பெற்று வந்தனர் என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுளளன.

நீண்ட காலமாக இடம்பெற்று வந்த இந்தக் குற்றச்செயலில் அண்மைக்காலமாக நீதிபதி ஒருவருக்கும் பங்கு வழங்கப்படவேண்டியிருப்பதாகக் கூறி மேலதிகப் பங்கு ஒன்றைப் பெறுவதற்குக் கப்பம் பெற்றவர்கள் முயன்றனர் என்றும் கூறப்படுகிறது.
திருட்டு மற்­றும் கொள்ளை நகை­களை உருக்­கித் தங்­க­மாக்கி வியா­பா­ரம் செய்யும் சில­ரி­டம் இருந்து பொலி­ஸார் சிலர் கப்­ப­மா­கத் தங்­கத்­தைப் பெற்று வந்­தார்­களா என்­பது தொடர்­பான விசா­ ர­ணை­களை பொலிஸ் உயர் அதிகாரி கள் ஆரம்பித்துள்ளனர். நகைக் கடை வர்த்தகர்கள் மூவரிடம் இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரி வித்தனர்.
இதில் ஏற்பட்ட தகறாறை அடுத்தே இந்த விவகாரம் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான சந்கேத்தில் உதவிப் பரிசோதகர் ஒருவர் உட்பட மூன்று பொலிஸாரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று தெரியவருகிறது.
பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவருக்கு மட்டும் மட்டும் 10 பவுன் தங்கமும், 25 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதன் நம்பகத் தன்மை பொலிஸாரின் விசாரணையின் பின்பே தெரியவரும்.
இது தொடர்பில் விசாரணைகளின் பின்னரே எந்த விவரத்தையும் கூறமுடியும் என யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்தார்.(15)