செய்திகள்

திருமணம் செய்ய தற்போது நான் தயாராக இல்லை: தீபிகா படுகோனே

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திருமணம் செய்து கொள்வதில் அவசரப்பட விரும்பவில்லை. வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் விஷயம். அதனால் அது சரியான நபருடன் சரியான நேரத்தில் நடக்க வேண்டும். என கூறியுள்ளார்.

பாலிவுட்டில் பிசியாக இருக்கும் தீபிகா ரன்வீரை காதலித்து வந்தது அனைவரும் அறிந்த விசயம். ரன்வீரும், தீபிகாவும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதற்கிடையில் தீபிகா படுகோனே தனது திருமணம் குறித்து திருமணம் செய்து கொள்ள தற்போது ஒரு அவசரமும் இல்லை புனிதமான திருமணத்தை அவசரப்பட்டு செய்ய விரும்பவில்லை செட்டிலாவது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை.

வேலை என்பது வேறு, திருமணம் செய்து கொண்டு செட்டிலாவது வேறு விஷயம். அதற்கு நான் தயாராக இல்லை என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.