செய்திகள்

திவிநெகும மோசடி வழக்கில் இருந்து பசில் ராஜபக்‌ஷ விடுதலை!

2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும நிதியை மோசடியாக பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் திவிநெகும பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கையெடுத்தமையை தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூபா 36.5 மில்லியன் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, பஞ்சாங்கம் மற்றும் GI குழாய் விநியோகித்த வழக்கில் இருந்தே குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான ரூ. 2,292 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட வழங்கியில் இருந்து பெசில் உள்ளிட்ட நால்வர் கடந்த தினம் விடுதலை செய்யயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
-(3)