செய்திகள்

தீர்வின்றி முடிந்த மகிந்த மைத்திரி சந்திப்பு

மகிந்த மைத்திரி சந்திப்பு தீர்வின்றி முடிந்தது என மைத்திரி தரப்பு கூறுகிறது.

இலங்கையில் அடுத்துவரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளனர்.

இந்த வேண்டுகோளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால தரப்பிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என, மஹிந்த ராஜபக்ஷவுடன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

அனைவரும் எதிர்பார்த்திருந்த பிரதமர் வேட்பாளர் தொடர்பில் திருப்திகரமான பதில் எதுவும் இந்தக் கூட்டத்தில் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.