செய்திகள்

துப்பாக்கி பிரயோகத்தின் மூலமாக கனடாவில் பலரை கொலைசெய்ய திட்டமிட்டவர்கள் கைது

கனடாவின் கலிபெக்ஸ் பகுதியில் பாரிய துப்பாக்கி பிரயோகம் ஒன்றின் மூலம் பலரை கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தாங்கள் முறியடித்துள்ளதாக அப்பகுதி பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாரிய படுகொலைக்கு திட்டமிட்டிருந்த மூவரை கைதுசெய்துள்ளதாகவும் நான்காவது நபரின் வீட்டை சுற்றிவளைத்த வேளை அவர்தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலைசெய்துகொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் இ இருவர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமொன்றிற்கு சென்று பலத்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களை கொலைகார கும்பல் என வர்ணித்துள்ள நீதியமைச்சர்,பீட்டர் மக்கே அவர்கள் திட்டமிட்டிருந்தபடி நடந்திருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபடடவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களில் 19 வயது இளைஞனும்,23 வயது யுவதியும் உள்ளதாகவும்,இவர்களிடம் துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டவருக்கு 19 வயது எனவும்ஈவிமானநிலையமொன்றில் கைதுசெய்யப்பட்ட மற்றைய சந்கேநபருக்கு 17 வயதெனவும் தகவல்கள் வெளியாகின்றன.