செய்திகள்

துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கண்டனம்!

கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தவறான முன்மாதிரி எனவும், இதனால் நாட்டின் நீதித்துறை கேள்விக்குறியாகுவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்த பொது மன்னிப்பின் மூலம் சட்டத்தின் ஆட்சியும் சுதந்திரமும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி கூறியுள்ளது.

அரசாங்கம் தனது அரசியல் நண்பனுக்கு மன்னிப்பை வழங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தினால் வழங்கப்பட்ட நீதியை இல்லாமல் செய்துள்ளதாகவும், இதனால் அவரின் விடுதலையை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதேவேளை இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட விடுதலை எந்த அடிப்படையிலானது என்பதனை நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
-(3)