செய்திகள்

துமிந்த சில்வாவின் விடுதலைக்கு எதிராக ஹிருணிக்கா மேன்முறையீடு

பொது மன்னிப்பில் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வாவை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்து, ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபரும் நீதி அமைச்சர், துமிந்த சில்வா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
-(3)