செய்திகள்

துமிந்த சில்வா விடுதலை – இலங்கையின் சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

துமிந்தசில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானம் இலங்கையின் சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்யும் நடவடிக்கை அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை 2018 இல் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் செய்துள்ள ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமமான அணுகல் அடிப்படைக்கு இது விரோதமானது ”என்று தூதுவர் டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்பட்டமையை தூதுவர் வரவேற்றார்.(15)