செய்திகள்

துஷ்பிரயோகத்துக்கெதிராக சிறுவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (படங்கள்)

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினம் கடந்த 12 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வட்டகொடை நகரத்தில்  பிரிடோ நிறுவன வழிக்காட்டலில் இயங்கும் சிறுவர் கழக உறுப்பினர்கள் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் 100 இற்கு மேற்ப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில கலந்து கொண்ட சிறுவர்கள் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் பேரணியாக வட்டக்கொடை தோட்டம் வரை சென்றனர்.

இதன் போது சிறுவர்கள் வித்தியாவின கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதுடன் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுக்குமாறு கோரியும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான  பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்துக்கொண்டனர்.

இதேவேளை மற்றுமொரு பேரணி நானுஓயா பிரதான நகரத்தில் இன்று  காலை 10 மணிக்கு முன்பள்ளி ஆசிரியர்களின் ஏற்ப்பாட்டில் நடைப்பெற்றது. இப்பேரணியில் 150 இற்கும் மேற்ப்பட்ட சிறுவர்கள் கலந்துக்கொண்டனர்.

இப்பேரணியில் நானுஓயா பொலிஸ் பெண்கள் பிரிவு உத்தியோகஸ்தர் செல்வி ரசிக்கா அவர்கள் கலந்து கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக  விளக்கம் கொடுத்தமை குறிப்பிடதக்கது.

Nanuoya Child Pickting (1) Nanuoya Child Pickting (3) Nanuoya Child Pickting (10) Nanuoya Child Pickting (11) Nanuoya Child Pickting (12) Nanuoya Child Pickting (15) Nanuoya Child Pickting (16) Nanuoya Child Pickting (18) Watagoda Child Picketing (2) Watagoda Child Picketing (3) Watagoda Child Picketing (4) Watagoda Child Picketing (5) Watagoda Child Picketing (6) Watagoda Child Picketing (7) Watagoda Child Picketing (8)