செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை கண்டறியும் பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

களுதாவளை – மாவடி வீதியைச் சோந்த 25 வயதுடைய குணரத்தினம் வதனா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.