செய்திகள்

தென்னாபிரிக்காவில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன.

தென்னாபிரிக்காவில் குடியேற்றவாசிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்ற அதேவேளை இது தொடர்பாக 30ற்க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜொகானஸ்பேர்க்கை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய குழுவினர் பல வர்த்தகநிலையங்களை தீக்கிரையாக்கியுள்ளனர்.
அலெக்ஸாண்டிரா நகரில் கடைகளை சூறையாட முயன்றவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
_82367885_469693506
டேர்பனில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த தாக்குதல்களை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களுக்கு சென்றுள்ளனர்.அயல்நாடுகளான சிம்பாப்வே, மலாவி, மொசாம்பிக் போன்றவை தங்கள் நாட்டவர்களை மீள அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
வெள்ளிக்கிழமை இரவு குடியேற்றவாசிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள முயன்ற 30 ற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும் தாக்குதல்கள் குறித்த செய்திகளை சமூக ஊடகங்கள் ஊடாக அனுப்பவேண்டாம் இவை பதட்டத்தை உண்டுபண்ணுகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தோனசியாவிற்கான தனது விஜயத்தை தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா இரத்துச்செய்துள்ளார்.இந்த தாக்குதல்களை அதிர்ச்சியளிப்பவை என அவர் வர்ணித்துள்ளார்.