செய்திகள்

தெற்கிலும் தமிழ் அரசியல் கூட்டணியை அமைக்க திட்டம்

வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை போன்று தெற்கில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய தமிழ் அரசியல் கூட்டமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி வடக்கு , கிழக்கு தவிர மலையகம் உட்பட மற்றைய பிரதேசங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதானிகளிடையே இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிய வருகின்றது.

ஏதிர்வரும் தேர்தலில் தென் பகுதி தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாது வடக்கு , கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்குகளை பெறுவதை போன்று தென்பகுதியில் மக்களின் வாக்குகளை பெற்று தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டே இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளது.