செய்திகள்

தெற்கு பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 56 பொதுமக்கள் பலி

தெற்கு பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தின் ஷிகபூர் மாவட்டத்தில்  உள்ள மசூதியில் வெள்ளிகிழமை மதிய பிரார்த்தனைக்கு பிறகு இடம் பெற்ற குண்டு வெடிப்பில் 56 பொதுமக்கள் பலியாகி மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .

Pakistanஇதற்கு சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஜுன்டல்லாஹ் ஆயுதக்குழு உரிமை கோரியுள்ளது. இக்குழுவுக்கு டேஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் இஸ்லாமிக் அரசு (IS) போன்ற ஆயுதக்குழுக்களுடன் தொடர்புள்ளது . அண்மைகாலமாக பாகிஸ்தானில் வகுப்புவாத வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளமை  குறிப்பிடத்தக்கது.