செய்திகள்

தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயம்

ஹூன்னஸ்கிரிய பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து லொறி ஒன்றுடன் மோதி அதன்பின்னர் மரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் தெல்தெனிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஐவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.