செய்திகள்

தெல்லிப்பளை வாகன விபத்தில் இரு இளைஞர் மரணம்: ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்

தெல்லிப்பளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே மரணம் அடைந்ததுடன் மற்றும் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தல் செவன விடுதியில் நண்பர்களுடன் சென்று பொழுதை கழித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்த வேளையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பார்த்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் தெல்லிப்பளை கிழக்கு ஆனைக்குட்டி மதவடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உழவு இயந்திரத்துடன் மோதுண்டதில் அவுஸ்திரேலிய நாட்டில் இருந்து கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வந்தவரான நவக்குமார் நவரஞ்சன் (வயது 27) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.

இவருடைய குடும்பம் திருமணச் சடங்கிற்காக பிள்ளைகளுடன் இந்தியாவில் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் மோட்டார் கைக்கிளின் பின்னால் இருந்து வந்தவரான சுன்னாகம் சிவன் கோவிலடியைச் சேர்ந்த திருஞானம் பிரகாஸ் வயது 23 என்பவர் மயக்கமுற்று மிகவும் ஆபத்தான நிலையில் தெல்லிப் பளை ஆதார வைத்தியசாலையில் இரு ந்து இடமாற்றம் செய்யப்பட்டு யாழ்ப்பா ணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட நிலையில் நேற்றுமாலை மரணமடைந்துள்ளார்.