செய்திகள்

தெள்ளுப் பூச்சிகள் கடித்ததால் அட்டன் புனித கப்ரியல் மகளிர் வித்தியாலயம் மூடப்பட்டது

மாணவிகள் 4 பேரை தெள்ளுப் பூச்சிகள் கடித்ததால், அட்டன் புனித கப்ரியல் மகளிர் வித்தியாலயம் நேற்று காலை 11 மணியிலிருந்து இன்று வரை மூடப்பட்டுள்ளது.

4 மாணவிகள் தெள்ளுப் பூச்சிக்கடிக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டு காலை 11 மணிக்கு உடனடியாக பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டது. எனினும் தெள்ளூ பூச்சி பாடசாலை மூழுவதும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தெள்ளுப் பூச்சிகளை அழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக வித்தியாலயத்தின் அதிபர் ஷாம்பா ஹரந்தத்தி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அட்டன் – டிக்கோயா சுகாதாரப் பரிசோதகர்களுக்கு தெரிவித்திருப்பதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

Thellu  (1) Thellu  (2) Thellu  (3) Thellu  (5)