செய்திகள்

தெஹிவளை மத்திய சந்தையை மூட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை

பேலியகொட மத்திய மீன் சந்தையில் இருந்து லொறி மூலம் தெஹிவளை மத்திய சந்தைக்கு மீன் கொண்டு வந்தவர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப் பட்டமையை அடுத்து தெஹிவளை மத்திய சந்தையை மூட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.குறித்த மத்திய மீன் சந்தையில் பணியாற்றும் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் அத்தோடு இவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.(15)