செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியது

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.அம்மிருகக் காட்சிச்சாலையின் சிங்கத்தீவில் வதியும் தோர் எனப்படும் சிங்கத்துக்கே தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த சிங்கம் கடந்த 2012ஆம் ஆண்டு தென்கொரியாவிலிருந்து தேசிய மிருகக்காட்சிச் சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இந்தச் சிங்கம் பல நாட்களாக இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து பேராதெனிய கால்நடை பீடத்துக்கு சிங்கத்தின் சளி அனுப்பி பரிசோதிக்கப்பட்டதில் தொற்று உறுதியாகி யுள்ளது.இதேவேளை சிங்கத்தின் கூண்டுக்குப் பொறுப்பான இரு காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த மிருகக்காட்சி சாலையில் இருந்த வரிக்குதிரை மற்றும் நீர்யானை கொரோனா தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதையடுத்தே குறித்த மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கத்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.மேலும் இந்த சிங்கத்துடன் வசிக்கும் மற்றைய நான்கு சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.(15)